குழந்தை வளர்ப்பு ஒரு சவால். போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் நம் குழந்தைகள் வெற்றி பெற வேண்டுமென விரும்புகிறோம். நம் குழந்தைகள் வெற்றிகரமான, நிறைவான வாழ்க்கை வாழ நம்மால் எப்படி உதவ முடியும்? அந்த வெற்றியை எப்படி அளவிட முடியும்?
இப்புத்தகத்தில், ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், அவர்கள் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளை வளர்ப்பது பற்றி சில எளிய கருத்துக்களைக் கோடிட்டுக் காட்டுகிறார். சந்தோஷமும் பொறுப்பும், வாழ்க்கையைப்பற்றிய பரந்த கண்ணோட்டமும் கூர்மையான கவனமும், உறுதியான தனித்தன்மையும் மென்மையான குண நலன்களும் சேர்ந்து குழந்தைகள் வளர இந்த நுண்ணிய கருத்துகள் வரும் காலத்தில் சிறந்த அடித்தளமாக இருக்கும் என்பதைக் கூறவும் வேண்டுமோ?