நாரத பக்தி சுந்திரம்
அன்பின் மணிமொழிகள்
குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அருளிய விளக்கவுரை
குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அகிலம் போற்றும் ஓர் ஆன்மீகத் தலைவர்; கருணை மனங்கொண்ட மனிதாபிமானி. இவர் 1956-ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் பிறந்தார். இவர் தம் இளமைப் பருவத்தில் அடிக்கடி ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து விடுவார். நான்கு வயது சிறுவனாக இருந்தபோதே பகவத்கீதையை மனப்பாடமாக ஒப்புவித்துத் தனது ஆசிரியர்களை வியப்பிலாழ்த்தினார். குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலகமக்கள் யாவரும் மன அழுத்தமற்ற, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்திட வழிகாட்டும், உன்னத ஞானத்தைப் பரப்பும் நோக்கத்தோடு 1982-ஆம் ஆண்டு சர்வதேச கல்வி மற்றும் மனிதநேய, அரசுசாரா சேவை அமைப்பாகிய 'வாழும் கலை' நிறுவனத்தைத் தோற்றுவித்தார். இன்று 'வாழும் கலை' அமைப்பு, 156 நாடுகளில் விரிந்து, பரந்து ஓர் உலகளாவிய ஒப்பற்ற தன்னார்வ நிறுவனமாகச் சேவையாற்றி வருகிறது.
அன்பின்றி, நம் வாழ்க்கை ஓர் அங்குலங்கூட நகர இயலாது.
நம் வாழ்க்கை அன்பிலிருந்தே முகிழ்த்துள்ளது.
அது இயங்குவதும் அன்பினால்தான்.
வாழ்க்கையின் உச்சநிலையும் அன்புதான்.
- குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்